Rishabam August Matha Rasi Palan 2021

பொதுப்பலன்கள்

முதலீடுகள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். பண நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் செலவுகளும் குறைந்து காணப்படும் என்பதால் நீங்கள் சேமிப்பை உயர்த்திக் கொள்ள சிறந்த வாய்ப்பு கிட்டும் மாதம் ஆகும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்கள் தடைகளைத் தாண்டி பாடுபட்டால் முன்னேற்றம் காண இயலும். குடும்பத்தில் மூத்தவர்கள் வார்த்தைக்கு மதிப்பு அளித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மாணவர்களின் படிக்கும் திறன் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். தமிழ் ஜோதிடம்(Tamil Astrology)பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்

ரிஷப ராசி காதலர்களின் காதல் கனிந்து வரும் மாதமாக இந்த மாதம் இருக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். பெற்றோர்களை கவனம் செலுத்தி நன்கு பராமரிக்க வேண்டியிருக்கும்.

காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை

நிதிநிலை

இந்த மாதம் அதிக அளவில் வருமானம் ஈட்ட நாட்டம் கொள்வீர்கள். அதன் மூலம் உங்கள் வசதி வாய்ப்புகளில் ஏற்றம் காண விரும்புவீர்கள். மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கும் மற்றவர்களின் உதவியைப் பெறுவதற்கும் சாத்தியம் உள்ளது. தான தரும காரியங்களுக்குப் பணத்தைச் செலவு செய்வீர்கள்.

கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை

உத்தியோகம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். அதன் மூலம் மற்றவர்களின் பாராட்டுக்கும் ஆளாவீர்கள். அலுவலகத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள். வேலையை எளிதாக்கும் கூடுதல் மின்னணு சாதனங்களை நீங்கள் உங்கள் அலுவலகத்தின் மூலம் பெறுவீர்கள்.

உத்தியோக மேன்மைக்கு துர்கா பூஜை

சுயதொழில்

சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய திருப்பம் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விட மாட்டீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும் காலமாக இந்த மாதம் அமையும். தொழில் குறித்த நூதன முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள்.

சுய தொழில் சிறக்க சனி பூஜை

தொழில் வல்லுநர்கள்

உங்கள் தன்னம்பிக்கை இந்த மாதம் பளிச்சிடும். அளவோடு இருந்தால் அனுகூலம் காணலாம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் தொழிலை எளிதாக மேற்கொள்ள மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள்.
சுய தொழில் சிறக்க சனி பூஜை

ஆரோக்கியம்

நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். மீந்துபோன அல்லது கெட்டுப் போன உணவுகளை உண்ணாதீர்கள். உணவில் கவனம் இல்லாவிட்டால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

கல்வி

கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். பதட்டம் ஏதும் மனதில் இருக்காது. மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். மேலும் அவர்களின் ஊக்குவிப்பு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும்.

மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷ பூஜை

சுப நாட்கள்:
10, 14, 16, 21, 23, 24, 30, 31
அசுப நாட்கள்:
1, 2, 11, 12, 26, 27, 28, 29

Views: 32

Comment

You need to be a member of On Feet Nation to add comments!

Join On Feet Nation

© 2024   Created by PH the vintage.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service